மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் ரயில் மோதியதில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (8) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சுந்தரராஜா நிசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் சம்பவதினமான இன்று அதிகாலை 1.30 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் இருந்துள்ள நிலையில் மட்டு புகையிரதத்தில் இருந்து கொழும்பு நோக்கி பிரயாணித்த கடுகதி ரயில் மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.









