Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

11 months ago
in செய்திகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கி வரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த் தேசிய தரப்புகளுடன் பேச்சுகளை முன்னெடுத்திருந்தது.

அதன் பிரகாரம் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கொள்கை ரீதியிலான இணக்கப்பாடொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரை காத்திரமான முறையில் கையாள வேண்டியது அவசியம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதன் ஊடாகவே அடுத்த கட்டமாக தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் பிரகாரம் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒத்த நிலைப்பாட்டின் கீழ் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம்.

எனவே, அதை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடனும் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகம் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பேச்சுகள் பதவி சார்ந்தவை அல்ல என்பதால் தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி தமிழரசுக் கட்சியும் இதில் பங்கேற்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு எதிர்வரும் 11 ஆம் திகதி தமது கட்சியின் மத்திய குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருப்பதாகவும் அதன்போது மேற்குறிப்பிட்ட பேச்சுகளுக்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
பொலிஸ் சேவையில் 5000 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை

பொலிஸ் சேவையில் 5000 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு