Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உக்ரைனுக்கு எதிரான போரில் சர்வதேச விதிகளை மீறியுள்ள ரஷ்யா

உக்ரைனுக்கு எதிரான போரில் சர்வதேச விதிகளை மீறியுள்ள ரஷ்யா

1 year ago
in செய்திகள்

உக்ரைனுக்கு எதிரான போரில், சர்வதேச விதிகளை ரஷ்யா மீறியுள்ளது என, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், நேற்று (9) இரண்டு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியது.

உக்ரைன், நெதர்லாந்து ஆகியவை, ரஷ்யாவிற்கு எதிராக தொடுத்த வழக்குகளை இந்த நீதிமன்றம் விசாரித்து வந்தது.

ஒன்று, உக்ரைன் மீதான போர் தொடங்கியதிலிருந்து முழு அளவிலான படையெடுப்பின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த வழக்கு.

மற்றொன்று, 2014ல் 298 உயிர்களை பலிவாங்கிய மலேஷியா எயார்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட வழக்கு.

கடந்த 2014ல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற மலேஷியன் எயார்லைன்ஸ் விமானம், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் படைகளுக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்தபோது கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் 196 நெதர்லாந்து பயணியர் உட்பட 298 பேர் இருந்தனர்.

இந்த இரண்டு வழக்குகளிலும், சர்வதேச விதிகளை ரஷ்யா மீறியுள்ளதாக, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த, 2022ல் நீதிமன்றத்தின் நிர்வாக அமைப்பு, ரஷ்யாவை நீக்கி உத்தரவிட்டது. அதனால் தற்போதைய உத்தரவுகள், ரஷ்யாவை கட்டுப்படுத்தாது.

அதே நேரத்தில் ரஷ்யா மீதான புகார்களில் ஏற்கனவே விசாரணையை தொடங்கியதால், இந்த நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

முழு விசாரணை நடந்துள்ளதால், ரஷ்யா மீது ஐ.நா., மனித உரிமை கமிஷன் உள்ளிட்டவற்றில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில், இந்த உத்தரவு தாக்கத்தை ஏற்படுத்தும்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
விசா கட்டணத்தை இரண்டரை மடங்கு உயர்த்திய அமெரிக்கா

விசா கட்டணத்தை இரண்டரை மடங்கு உயர்த்திய அமெரிக்கா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு