தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், டிசம்பரில் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதற்காகவும் விசேட வழக்கு விசாரணைக் குழுவினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவில் கிளர்ச்சியை வழிநடத்திய குற்றச்சாட்டில் யூன் சுக்-இயோல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் அவருக்கு எதிரான குற்றவியல் விசாரணை தொடர்கிறது.
இந்நிலையில் ஜூன் மாதம் தென்னாபிரிக்க ஜனாதிபதியாக லீ ஜே-மியுங் பதவியேற்ற பிறகு, விசேட சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டனர், மேலும் அவர்கள் அரசாங்கத்திலிருந்து சுயாதீனமான விசாரணையைத் தொடங்கியதையடுத்து யூன் சுக்-இயோல் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.








