மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சாரணியம் ஆரம்பிக்கப்பட்டு 108 ஆண்டுகள் நிறைவில் முன்னிட்டு துருப்புக்கான ரீசேர்ட் அறிமுக நிகழ்வும் புதிய சாரண தலைவர்களை குழுவில் இணைத்துக் கொள்வதற்குமான நிகழ்வு நேற்று துருப்புக் கூட்டத்தில் நடைபெற்றது.
இது தொடர்பான நிகழ்வு கல்லடி கடற்கரையில் குழுச் சாரண தலைவர் ஆ. சந்திரசுசர்மன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் துருப்பில் புதிதாக இணைந்து கொண்ட சாரண தலைவர்கள் சாரணர்களால் துருப்புக்கான கழுத்துக் குட்டை அணிவித்து சாரண முறைப்படி வரவேற்கப்பட்டார்கள்.
செ. செல்வாகரன், பார்த்தீபன், நரசிம்மன், சதுர்ஷன் மற்றும் திருமதி. சுரேஷ் ஆகியோர் இன்று துருப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் குருளைச் சாரண தலைவர் என். பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது சாரணிய மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சாரணிய உரைகளும் நடைபெற்றன.










