Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஆர்.டீ.ஏ அலுவலகத்தினை முற்றுகையிட்டு தற்காலிக ஊழியர்கள் போராட்டம்

மட்டு ஆர்.டீ.ஏ அலுவலகத்தினை முற்றுகையிட்டு தற்காலிக ஊழியர்கள் போராட்டம்

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தினை முற்றுகையிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக நிலைய ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

கடந்த 10வருடத்திற்கும் மேலாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி சீரமைப்பு ஊழியர்களாக பணியாற்றும் தற்காலிக நிலை ஊழியர்களே இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தங்களை இணைத்துக்கொள்ளும் போது எந்த கல்வித்தகமையும் கோராத நிலையில் இன்று கா.பொ.த.சாதாரண தரம் கற்றிருந்தால் மட்டுமே தமது தொழிலை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக்காரியாலயத்தில் கா.பொ.த.சாதாரண தரம் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக கடமையாற்றும் ஊழியர்களுக்கான நேர்முகதேர்வு நடைபெற்றுவரும் நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வீதிகளில் நெருப்பு வெயிலுக்கும் மத்தியிலும் மழைகாலத்திலும் கடுமையான பணிகளை முன்னெடுத்துவரும் தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குவதற்கு கல்வி சான்றிதழ் என்ற விடயத்தினைக்கொண்டுவந்து தமது உரிமையினை பறிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது ஊழியர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

கல்வித்தரம் கோரப்படாத நிலையில் தாங்கள் தற்காலிக நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குள் உள்வாங்கப்பட்டு 10வருடத்திற்கு மேலாக பணியாற்றிய நிலையில் இன்று கல்விச்சான்றிதழ் கொண்டுவாருங்கள் நிரந்தர நியமனம் தருகின்றோம் என்று கூறுவது எங்களது வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கும் செயற்பாடு எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

30ஆயிரும் ரூபா சம்பளமே மாதந்தம் பெற்றுவருவதாகவும் பொருளாதார நெருக்கடி நேரத்திலும் தாங்கள் பல கஸ்டங்களுக்கு மத்தியிலேயே குடும்பத்தினை நடாத்திவரும் நிலையில் விடுமுறையும் இல்லாமல் கடமையாற்றிக்கொண்டிருக்கும் நிலையிலும் தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குவதற்கு பின்னடிக்கும் செயற்பாடுகளை கைவிட்டு அனைவரையும் நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் ஊழியர்களின் இந்த கோரிக்கை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்
அரசியல்

“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
Next Post
பாடசாலை பாட வேளை 07 ஆக குறைக்கப்பட்டு பாட நேரம் 50 நிமிடங்களாக அதிகரிப்பு

பாடசாலை பாட வேளை 07 ஆக குறைக்கப்பட்டு பாட நேரம் 50 நிமிடங்களாக அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு