Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தினமும் 3 கப்களுக்கு மேல் ” டீ ” குடிப்பீங்களா..? இந்த ஆபத்தை தெரிஞ்சுக்கிட்டா இனி செய்ய மாட்டீங்க..!

தினமும் 3 கப்களுக்கு மேல் ” டீ ” குடிப்பீங்களா..? இந்த ஆபத்தை தெரிஞ்சுக்கிட்டா இனி செய்ய மாட்டீங்க..!

1 year ago
in செய்திகள்

பால் தேநீரில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது, செரிமானத்துக்கு உதவுவது மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது என பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால், தேநீரை அதிகமாக குடிப்பது, குறிப்பாக ஒரு நாளில் மூன்று முதல் நான்கு கப்புகளைத் தாண்டினால், சில உடல்நல பிரச்சனைகளுக்கும் காரணமாகும்.

“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்” என்கிற பழமொழிக்கு ஏற்ப, அதிகப்படியான தேநீர் உட்கொள்ளலால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும், என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

இன்றைய பரபரப்பான வேலை வாழ்க்கை சூழலில், பலரும் டீ குடிப்பதை தங்களது வழக்கத்தில் சேர்த்துள்ளனர். காலையில் ஒரு கப், மாலையில் ஒரு கப் என தேநீர் இல்லாமல் பலருக்கும் அந்த நாள் முழுமையடையாது. ஆனால், அளவுக்கு அதிகமாக தேநீர் குடிப்பது சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, எப்பொழுது, எவ்வளவு தேநீர் குடிக்கலாம் என்பதையும், அதற்கு பின்னால் கூறப்படும் விஞ்ஞான ரீதியான காரணங்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேநீரில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது, செரிமானத்துக்கு உதவுவது மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது என பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால், தேநீரை அதிகமாக குடிப்பது, குறிப்பாக ஒரு நாளில் மூன்று முதல் நான்கு கப்புகளைத் தாண்டினால், சில உடல்நல பிரச்சனைகளுக்கும் காரணமாகும்.

தேநீர் அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

  1. இரும்பு உறிஞ்சுதலை குறைக்கும்
    டானின்கள் மற்றும் பாலிபினால்கள், உணவில் உள்ள மூலிகை சார்ந்த இரும்புச்சத்துடன் பிணைந்து, அவை குடலில் உறிஞ்சப்படாமல் தடுக்கின்றன. இதனால், குறிப்பாக சைவ உணவை அடிப்படையாகக் கொண்டவர்களில் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் தொடர்ந்து சோர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  2. காஃபின் அதிகம் – தூக்கமின்மை மற்றும் பதட்டம்
    தேநீரில் உள்ள காஃபின் அளவு அதிகரித்தால், தூக்கம் குறைதல், பதட்டம், இதயத் துடிப்பு, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
  3. செரிமான கோளாறுகள்
    வெறும் வயிற்றில் அதிக தேநீர் குடிப்பது நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் அமிலத்தன்மையை தூண்டும். இது வயிற்று திசுக்களில் எரிச்சலையும் ஏற்படுத்தும்.
  4. தலைவலி
    தொடர்ந்து அதிக அளவில் காஃபின் (தேநீர், காபி) உட்கொள்ளும் பழக்கம் உருவானால், அதை திடீரென நிறுத்தும் போது தலைவலி, சோர்வு போன்ற பிரச்சனைகளை உருவாக்கக் கூடும். இவ்வாறு தொடர்ந்து டீ குடிப்பவர்கள் அதிலிருந்து வெளியேற சீரான முறையில் அவற்றை குறைக்க வேண்டியது அவசியம்.
  5. கர்ப்பத்தில் ஆபத்து
    அதிக காஃபின் உட்கொள்ளல் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தை மற்றும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். எனவே, கர்ப்பிணிகள் தினசரி 200 mg காஃபின் அளவிற்குள் குடிப்பது நல்லது (இது சுமார் 2 கப் தேநீருக்கு சமம்).
  6. எலும்பு ஆரோக்கியம் குறைதல்
    அதிக காஃபின் உட்கொள்ளும் போது சிறுநீர் மூலமாக அதிக அளவில் கால்சியம் வெளியேறும். இது நீண்ட காலத்தில் எலும்பு பலவீனத்திற்கு வழிவகுக்கும்.
  7. இதயத்தில் தாக்கம்
    காஃபின் இரத்த அழுத்தத்தையும், இதயத் துடிப்பையும் தற்காலிகமாக உயர்த்தும். எனவே, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தேநீர் அருந்தும் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  8. மாசுபட்ட தேநீர் இலைகள்
    சில தேயிலை வகைகள் மண்ணில் உள்ள இயற்கையான கனிமங்களான லெட், அலுமினியம் போன்றவற்றை உறிஞ்சும் வாய்ப்பு இருப்பதால், நல்ல தரமான பிராண்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரு நாளில் எத்தனை கப் தேநீர் பாதுகாப்பாக இருக்கும்?

  • ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் வரை தினசரி குடிப்பது பாதுகாப்பானது என்பது நிபுணர்களின் பரிந்துரையாக உள்ளது.
  • உணவுக்கு முன்பு அல்லது உணவுக்குப் பின்பு 1 மணி நேர இடைவெளியில் குடிப்பது சிறந்தது.
  • அதிக காஃபின் உள்ள பானங்களைத் தவிர்த்து, மூலிகை தேநீர், ரூய்போஸ், வெள்ளை தேநீர் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், எந்த வகையான தேநீர் அல்லது காபியாக இருந்தாலும் சரி மிதமான அளவில் எடுத்துக் கொள்வதே உடலுக்கு நன்மை பயக்கும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
முஸ்லிம் மார்க்க சட்டங்களை மாற்றியமைக்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை; அமைச்சர் சரோஜா போல்ராஜ்

முஸ்லிம் மார்க்க சட்டங்களை மாற்றியமைக்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை; அமைச்சர் சரோஜா போல்ராஜ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.