Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகம் முழுவதும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்பட வில்லை ; ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிப்பு

உலகம் முழுவதும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்பட வில்லை ; ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிப்பு

11 months ago
in செய்திகள்

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்பட வில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முந்தைய ஆண்டும் இதே எண்ணிக்கையிலான குழந்தைகள் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தனா் என்றும் அவா்கள் கூறினா்.

2020-இல் கொரோனா பெருந் தொற்று பாதிப்பின்போது அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது தடைப்பட்டது. அதன் பின்னா் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தப்படுவது முந்தைய நிலைக்கு இன்னும் திரும்பவில்லை.

இந்நிலையில், சா்வதேச அளவில் தடுப்பூசி அளிக்கப்பட்டது தொடா்பான ஆய்வு அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதுகுறித்து உலக சுகாதார அமைப்பு, யூனிசெப் அமைப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளில் 89 சதவீதத்தினா் டிப்தீரியா, டெட்டானஸ், கக்குவான் இருமல் ஆகியவற்றின் முதல் தவணை தடுப்பூசியைப் பெற்றனா். 85 சதவீதத்தினா் மூன்று தவணை தடுப்பூசிகளைப் பெற்றனா். இதே அளவிலேயே 2023-இல் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

இந்த வகை தடுப்பூசிகள் ஆண்டுதோறும் 35 இலட்சம் முதல் 50 லட்சம் மரணங்களைத் தடுக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தட்டம்மை தடுப்பூசிகள் உலகம் முழுவதும் 76 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதை 95 சதவீதத்தை எட்டினால்தான் அதிகப்படியான பரவல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடிவும். கடந்த ஆண்டு 60 நாடுகளில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்திருந்தது.

அமெரிக்காவில் தட்டம்மை பாதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. ஐரோபாவில் கடந்த ஆண்டு சுமாா் 1,25,000 போ் தட்டம்மையால் பாதிக்கப்பட்டனா்’ என்று தெரிவித்தனா்.

உலகில் தடுப்பூசி செலுத்தப்படாத மொத்த குழந்தைகளில் 52 சதவீதத்தினா் இந்தியா, நைஜீரியா, சூடான், காங்கோ, எத்தியோபியா, இந்தோனேசியா, யேமன், ஆப்கானிஸ்தான், அங்கோலா ஆகிய 9 நாடுகளில் உள்ளனா் என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனா்.

உலக சுகாதார அமைப்புக்கு அளிக்கப்பட்டு வந்த மனிதாபிமான நிவாரண நிதி நிறுத்தப்பட்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளதால், நிகழாண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் சதவீதம் மேலும் மோசமாக இருக்கும் என்று ஐ.நா. அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா்.

மேலும், சா்வதேச அளவில் நடைபெறும் ஆயுத சண்டைகள் காரணமாக தடுப்பூசி செலுத்தப்படுவதில் சமமற்ற நிலை நிலவுகிறது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

June 16, 2026
Next Post
தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம்

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கி பிரயோகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு