49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் கரப்பந்தாட்ட போட்டிகள் இன்று (17) காலியிலுள்ள தடல்ல உள்ளக மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
இதன் தொடக்க நிகழ்வில், நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் காலி மாநகர சபையின் மேயர் சுனில் கமகே உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த தேசிய அளவிலான போட்டிகள், ஜூலை 20ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

போட்டிகள் காலி தடல்ல உள்ளக மைதானம், ஹிக்கடுவ நகர சபை விளையாட்டு மைதானம், மாத்தறை கொட்டவில உள்ளக மைதானம் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது.
இவ்வாறு பல இடங்களில் நடைபெறும் இந்த போட்டிகள், மாகாணங்களுக்கு இடையிலான விளையாட்டு ஆற்றலை வெளிப்படுத்தும் முக்கியமான மேடையாகும்.








