Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி படுகொலைக்கு விசாரணை கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் பிரேரணை நிறைவேற்றம்

செம்மணி படுகொலைக்கு விசாரணை கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் பிரேரணை நிறைவேற்றம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

செம்மணி படுகொலைக்கு கண்டனமும் சர்வதேச நீதியான விசாரணை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரி மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் தமிழரசு கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் 17ம் திகதி அன்று கொண்டு வந்த பிரேரணையினை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உட்பட 34 உறுப்பினர்களும் ஏக மனதாக ஆதரவு வழங்கி நிறைவேற்றப்பட்டது.

மட்டு மாநகர சபையின் இரண்டாவது சபை அமர்வு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது இதன் போது தமிழரசு கட்சியின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் இடம்பெற்ற படுகொலைக்கு கணடனம் தெரிவித்தும் அதற்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என கோரி பிரேரணை ஒன்றை கொண்டு வந்து உரையாற்றினார்.

இதன்போது அவர் சகோதரி கிரிசாந்தினி படுகொலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செம்மணி படுகொலை தமிழ் மக்களை திட்டமிட்டு படுகொலை செய்யும் ஒரு அங்கமாக பார்க்கின்றேன் சோமரத்தின ராஜபக்ச என்ற சிங்கள இராணுவத்தைச் சேர்தவர் சர்வதேச மன்னிப்பு சபையின் அழுத்தத்தின் காரணமாக கைது செய்யப்பட்ட அவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் செம்மணி படுகொலை தெரியவந்து புதைகுழி தோண்டப்பட்டது ஆனால் இடைப்பட்ட காலத்தில் அது நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் புதைக்கப்பட்ட சடலங்களின் எச்சங்களை தோண்டி எடுத்து எரிக்கப்பட்டபோது அங்கு புகை மண்டலம் வந்ததையடுத்து பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து மீண்டும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அழுத்தம் காரணமாக தோண்டப்பட்டு இதுவரை சிறுவர்கள் உட்பட 65 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவத்தைச் சேர்ந்த சோமரத்தின ராஜபக்சவின் உயர் அதிகாரிகளின் பணிப்புக்கு அமைய 400 க்கு மேற்பட்ட எங்கள் உறவுகளை அழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த படுகொலைகளைப் பற்றி ஆராயப் போனால் மட்டக்களப்பிலே சத்துருக்கொண்டான், மிருசுவில் படுகொலை என அதிக படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த மிருசுவில் படுகொலையில் சுனில் ரத்நாயனக்கா என்ற இராணுவ சிப்பாய் 8 பேரை கொலை செய்து 9 வது நபரை கொலை செய்ய முற்பட்ட போது அவர் தப்பி ஒடி வெளிக்கொண்டுவந்ததில் அந்த இராணுவச்சிப்பாய் கைது செய்யப்பட்டு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கிய அவரை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்தார்.

எனவே எமது இனத்தை திட்டமிட்டு அழிக்கும் எவரையும் நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவே இந்த தமிழ் மக்கள் மீதான படுகொலை தொடர்பில் எதிர்கால இளம் சமூதாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

இதனடிப்படையில் தற்போதைய அரநு இந்த செம்மணி படுகொலை தொடர்பான விசாரணையை முன்னெடுக்கப்பட வேண்டும் அதேவேளை இந்த விசாரணை சர்வதேச கண்கானிப்புடன் இடம்பெறவேண்டும் என்பதுடன் இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதாக பிரேரனையை முன்வைத்து உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து பல உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உரையாற்றியதுடன் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 11 பேர் உட்பட 34 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்
அரசியல்

‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

August 4, 2026
மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
செய்திகள்

மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

August 4, 2026
ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!
செய்திகள்

ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!

August 4, 2026
60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!
செய்திகள்

60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!

August 4, 2026
சர்ச்சை பேச்சு விவகாரம்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!
உலக செய்திகள்

சர்ச்சை பேச்சு விவகாரம்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

August 4, 2026
இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!
உலக செய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

August 4, 2026
Next Post
கொழும்பு – மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் காட்டு யானை மோதி  உயிரிழப்பு

கொழும்பு - மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் காட்டு யானை மோதி உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.