Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடி தவிசாளர் கட்சிக்கு எதிராக செயற்பட்ட சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை; அமீர் அலி

ஓட்டமாவடி தவிசாளர் கட்சிக்கு எதிராக செயற்பட்ட சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை; அமீர் அலி

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தீர்மானத்துக்கு எதிராகவும் கட்சியின் கட்டுக்கோப்பை மீறியும் கட்சி யாப்புக்கு விரோதமாக கட்சி மாறி தவிசாளரான பைரூஸ் உட்பட சில இடங்களில் இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்ககாற்று நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை கோயிலை இடித்து இறைச்சிக் கடையும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டப்பட்டது என்று குற்றச்சாட்டை சுமத்தியிருந்த அவரோடு கைகோர்த்து இந்த ஆட்சியைக் கைப்பற்றியது பாராட்டத்தக்கது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்றை நிலையத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமீர் அலி மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஓட்டமாவடி கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி சின்னத்திலே போட்டியிட்டோம்.

இதில் 8 வட்டாரங்கனை நாங்கள் வென்றோம். அதனோடு போட்டியிட்ட சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் இரண்டு வட்டாரங்களை வென்றதுடன் 4 போனஸ் ஆசனங்கள் கிடைத்தது. அதேவேளை தேசிய மக்கள் சக்திக்கு இரண்டு ஆசனங்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனமும் இலங்கை தமிழரசு கட்சிக்கு ஒரு ஆசனமும் சுயேச்சைக்குழு ஒன்றிற்கு ஒரு ஆசனம் உட்பட 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் யூன் 16ம் திகதி சபை அமர்வு இடம்பெற இருந்த நிலையில் அன்றைய தினம் எனது கட்சிக் காரியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கட்சி எவ்வாறு சொல்லியுள்ளதோ அதன் அடிப்படையில் தவிசாளராக கலால்தீன் பிரதி தவிசாளராக அன்சார் ஆகவேண்டும் என்ற அடிப்படையில் கட்சி எடுத்துக் கொண்ட தீர்மானத்தை அவர்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தினேன்.

இதன்போது தற்போது ஓட்டமாவடி பிரதேச சபையினுடைய தவிசாளர் பைரூஸ் அந்த கூட்டத்திலே தொடர்ந்து கலந்து கொண்டார். காலை 10 மணி தொடக்கம் இடம்பெற்ற அந்த கூட்டத்தை பகல் போசனத்துக்காக அதாவது சபனில் முஸ்லீம்கள் ஒரு தாம்பாளத்திலே 6 பேர்

ஒன்றாக இருந்து சாப்பிடும் முறை அந்த முறையில் தற்போதைய பிரதேச சபை தவிசாளரும் இருந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் இரண்டாவது அமர்வாக தெளிவாக பேசினேன் அதில் கட்சி பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்டவரை தவிசாளராகவும் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்வது என தெரிவித்தேன்.

இதன்போது ஒட்டு மொத்தமாக 9 பேரும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன் எனது கையில் பைரூஸ் உட்பட அனைவரும் சத்தியம் செய்துவிட்டு சென்றனர். அதேநேரத்தில் தவிசாளரான பைரூஸ் சாப்பிட்டுவிட்டு கையை கழுவிவிட்டு வருகின்றேன்; என ஓடோடிச் சென்று அங்கு சென்று அவர்களுக்கு உடன்பாடு தெரிவித்து கட்சி மாறினார்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புலா தமிழரசுகட்சியுடன் கைகோர்த்து இந்த ஆட்சியை கைப்பற்றினர் அதில் எனக்கு வியப்பான விடையம் ஓட்டுமாவடியில் கோயிலை இடித்து இறைச்சிகடை கட்டியது எனவும் மயானத்தை உடைத்து பிரதேச செயலகம் கட்டப்பட்டது என்று குற்றச்சாட்டை சுமத்தியிருந்த போதும் கூட இலங்கை தமிழரசு கட்சி அவரேடு கைகோர்த்து இந்த ஆட்சியை கைப்பற்றிய பணியை செய்திருப்பது பாராட்டத்தக்கது.

இருந்தபோதும் அப்படியான நிலையில் அவர்கள் உள்ளாந்த ரீதியாக எங்களுடைய கட்சி உறுப்பினராக இருந்த பைரூஸ் தவிசாளராக்கி பிரேரணை கொண்டுவந்து ஒரு அருவருப்பான முறையிலே சபையை வழிநடாத்தியுள்ளனர்.

எனவே எங்கள் கட்சி தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டதுடன் சத்தியத்தை மீறி கட்சியின் கட்டுக்கோப்பை மீறி கட்சி யாப்புக்கு விரோதமாக தவிசாளராக வந்திருப்பது சட்ட விரோதமானது எனவே கட்சியின் ஒழுக்ககாற்று குழு மிகவும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதுடன் அவர் மாத்திரமல்ல நாட்டிலே எங்கள் கட்சிக்குள் சில இடங்களில் இவ்வாறு இடம்பெற்றதன் அடிப்படையில் அவர்களுக்கு எதிரா ஒழுக்ககாற்று நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு
செய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

September 30, 2026
பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

September 30, 2026
தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!
செய்திகள்

தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

September 30, 2026
பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!
செய்திகள்

பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!

September 30, 2026
டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
Next Post
கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் சிக்கின

கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் சிக்கின

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.