சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்கிரமரத்னவை தொலைபேசியில் ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டாலும் அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து தனது செயலாளர் “ஜனக மகேஷ்சிடம் கேட்டுகொள்ளுங்கள்“ என பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாக பிரபல சகோதர மொழி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தொடர்ந்து சபாநாயகரிடம் தொடர்பு கொண்டு வினவ வேண்டிய பல விடயங்கள் இருந்தாலும் அது தொடர்பாக அவர் பதிலளிப்பதே இல்லை எனவும் பல ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் உங்களிடம் கேட்க்கப்படும் கேட்விக்கு ஒரு செயலாளரால் பதிலளிக்க முடியுமா? என வினவிய போது அவரிடம் நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என பொறுப்பற்ற விதத்தில் பதில் அளிப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.








