Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை என்பதே இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு; ரவூப் ஹக்கீம் எம்.பி

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை என்பதே இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு; ரவூப் ஹக்கீம் எம்.பி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் ஒரு போதும் வட, கிழக்கு இணைப்பில்லை என மறைந்த அபூர்வ ஆளுமை இரா.சம்பந்தன் ஐயா தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் என ரவூப் ஹக்கீம் நேற்று (25) இடம்பெற்ற ஆர்.சம்பந்தன், மாலினி பொன்சேகா, லக்கி ஜெயவர்தன ஆகியோர் பற்றிய அனுதாபப்பிரேரணையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) மறைந்த அண்ணன் ஆர் .சம்பந்தன் பற்றிய அனுதாபப்பிரேரணையில் தொடந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம், கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் பாராளுமன்றத்தில் நாங்கள் மிக அபூர்வமாக காண்கின்ற ஆளுமை என்று சொன்னால் அது மிகையாகாது.

சம்பந்தனுடைய அரசியல் வெவ்வேறு யுகங்களாகப் பிரித்து ஆராயப்பட வேண்டும். அவருடைய சரிதை எழுதப்படுகின்ற போது அந்தந்த யுகங்களில் தமிழ் சமூகத்தின் விடுதலைக்கான அவருடைய பங்களிப்பை நாம் நிறையவே பேசலாம்.

உண்மையில் தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற அடிப்படையில் தமிழ் விடுதலைக்கட்சிகளை ஒன்றிணத்து தமிழர் விடுதலைப்போராட்டத்திற்கான ஜனநாயகப் போராட்டத்தை பாராளுமன்றத்தினூடாக செய்வதற்காக முதல் முறையில் அவர் 1977ம் ஆண்டு தந்தை செல்வாவுடைய மரணத்திற்கு பின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் அமிர்தலிங்கத்தின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு வந்தார்.

1983ம் ஆண்டு கலவரத்திற்குப்பிற்பாடு தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் இச்சபையிலிருந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்த பின்னணியில், அவரும் இராஜினாமா செய்து தமிழகம் சென்றார்.

தமிழகத்திலிருந்து கொண்டு அகதியாக தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக அவர் முன்னெடுத்த போராட்டம், அப்போராட்டத்தில் மும்மூர்த்திகளாக அண்ணன் அமிர்தலிங்கம், அண்ணன் சிவசிதம்பரம், அண்ணன் சம்பந்தன் ஆகியோர் இருந்தார்கள்.மேலும், தமிழர் விடுதலைக்கான நீண்ட போராட்டத்தில் இந்திய அரசோடு நீண்ட பேச்சுவார்த்ததைகளிலும் ஈடுபட்டனர்.

இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி உட்பட இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு காரணமாக அமைந்த மிக முக்கியமான அரசியல் தலைமை எங்களுக்கு மத்தியில் இன்றில்லை என்பதையும் அந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது, இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்ற விவகாரத்தை தன்னுடைய பிற்காலத்தில் மிகத்தெளிவாக உணர்ந்து கொண்டு வடகிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் ஒரு பொழுதும் நடைபெற்று விடக்கூடாதென்பதில் மிக கரிசனையோடு செயற்பட்ட ஒருவராகவும்,பகிரங்கமாக தன்னுடைய அரசியல் நிலைப்பாடாக அதனை அவர் கூறி வந்தார். அதையிட்டு அவருக்கு நாங்கள் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அண்ணன் சம்பந்தனைப்பற்றி நீண்டநேரமாக நாங்கள் பேசலாம். அவருடைய அரசியலில் இன்னுமொரு சவாலுக்குரிய சந்தர்ப்பமாக 2000ம் ஆண்டுக்கு பிற்பாடு அமைந்தது.

விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது, அப்பேச்சுவார்த்தை சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகளின் தயார்படுத்தலின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உதயமானது.

வெவ்வேறாகப்பிரிந்து நின்ற அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து 22 பேரைக்கொண்ட பெரியதொரு பாராளுமன்றக்குழுவாக ஒரு பாரிய அரசியல் பிரதிநிதித்துவம் பெற்ற அமைப்பாக மிக முக்கியமான பங்களிப்பை நல்கினார்கள்.

விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் அரச தரப்பு பேச்சுவார்த்தைக்குழுவில் நான் அரச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம்களின் சார்பில் நோர்வே ஏற்பாட்டாளர்களோடு கலந்து கொண்டேன்.

அப்பேச்சுவார்த்தைகளின் போது அடிக்கடி அண்ணன் சம்பந்தனோடு கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. அவரோடு ஒவ்வொரு பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக ஒன்றாக நான் கடமையாற்றி இருக்கிறேன்,

அச்சந்தர்ப்பத்தில், தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக்காண்கின்ற விடயத்திலும் இன்னும் தீர்வு காணப்பட்டிருக்கின்ற பல பிரச்சினைகள் சம்பந்தமாகவும் நாங்கள் அடிக்கடி எங்களுக்குள்ளே அளவளவியிள்ளோம்,

எப்படி சுமுகமாக இப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது என்பது சம்பந்தமான பல பிரச்சினைகளில் அவரோடு நான் கழித்த அந்த இனிய நினைவுகளைப்பற்றி மீண்டும் நான் இங்கு நினைவுகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக எப்படிச்செயற்பட்டார் என்பது பற்றி நிறையப்பேசலாம். தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இன்றியமையாத ஒரு வகிபாகத்தை அண்ணன் இரா.சம்பந்தன் வகித்தார்

அவரின் ஆத்மா சாந்தியடையப்பிரார்திக்கின்ற அதேவேளை, தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இன்றியமையாத ஒரு வகிபாகத்தை அண்ணன் இரா.சம்பந்தன் வகித்தார் என்பதை நான் சான்று பகிர்கின்றேன்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்
செய்திகள்

சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்

October 11, 2026
ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி தவறைச் சீர்செய்ய வேண்டும்: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி தவறைச் சீர்செய்ய வேண்டும்: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

October 11, 2026
குறுகிய தூர SLTB பேருந்துப் பயணங்களில் தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டம்!
செய்திகள்

குறுகிய தூர SLTB பேருந்துப் பயணங்களில் தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டம்!

October 11, 2026
திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!
செய்திகள்

திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!

October 11, 2026
குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது
செய்திகள்

குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது

October 11, 2026
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் சாமர சம்பத்
செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் சாமர சம்பத்

October 11, 2026
Next Post
திருகோணமலை- வாகரை வரையிலான கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

திருகோணமலை- வாகரை வரையிலான கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.