உகந்தை வழியாக கதிர்காம பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக புதிய பதிவு நடைமுறை ஒன்றை இராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, உகந்தை பகுதிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களின் அடையாளம் மற்றும் குடும்ப விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு விசேட அனுமதி அட்டை வழங்கப்படுகிறது.
அந்த அனுமதி அட்டையை குமனை காட்டு நுழைவுப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சமர்ப்பித்த பின்னரே, குமனை வழியாக கதிர்காமம் நோக்கி பயணிக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, உகந்தை வழியாக பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களது தேசிய அடையாள அட்டையுடன் வருகை தந்து, பதிவு செய்து அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.









