நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வர எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (10) தீர்மானித்துள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உயிரிழந்தமை தொடர்பாக, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தனது கடமையையும் பொறுப்பையும் அமைச்சர் முறையாக நிறைவேற்றத் தவறியதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (10) பாராளுமன்றத்தில் குறித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த தீர்மானம் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







