மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க அனுமதிக்கும் வகையில், இன்று (27) முதல் காசா பகுதியில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் போர் நடவடிக்கைகளை நிறுத்துவதாக இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது
அதன்படி, இன்று (27) முதல் அல்-மவாசி, டெய்ர் அல்-பலா மற்றும் காசா நகரம் ஆகிய மூன்று பகுதிகளில் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடவடிக்கைகளை நிறுத்துவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்தன.








