Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் என கூறி பதிவு சான்றிதழை மாற்ற 30 ஆயிரம் கேட்ட இடைத்தரகர் கைது

அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் என கூறி பதிவு சான்றிதழை மாற்ற 30 ஆயிரம் கேட்ட இடைத்தரகர் கைது

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்றின் பதிவு சான்றிதழை மாற்றுவதற்காக 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திங்கட்கிழமை (28) முற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன திணைக்களத்துக்கு அருகில் இலஞ்சத்தை பெற்றுக் கொள்ள முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றின் தற்காலிக பதிவு சான்றிதழை ஆரம்ப பதிவு சான்றிதழாக மாற்றிக்கொள்வதற்கு மோட்டார் வாகன திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் எனத்தெரிவித்து குறித்த சந்தேக நபர் 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பணத்தில் 10 ஆயிரம் ரூபாவை முற்பணமாக பெற்றுக்கொள்வதற்கு முற்பட்ட போதே சந்தேக நபர் மோட்டார் வாகன திணைக்களத்துக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் அறையில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் திங்கட்கிழமை (28) முற்பகல் 11 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
“அமைதியின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்”; டொனால்ட் டிரம்ப்

"அமைதியின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்"; டொனால்ட் டிரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு