Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் காதலனுக்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகை திருடிய பெண்

யாழில் காதலனுக்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகை திருடிய பெண்

1 year ago
in செய்திகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டிக்டொக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், டிக்டொக் சமூக வலைத்தளத்தில் தனது காணொளிகளைப் பதிவேற்றி, பிரபலமாகத் தன்னைக் காட்டிக்கொண்டு வந்துள்ளார்.

இவர் டிக்டொக் மூலம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கு அறிமுகமாகி, அவரை காதலித்து வந்துள்ளார்.

அந்நிலையில், தனது காதலனுக்கு அதிநவீன மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதற்காகவும், அவருக்கு சொகுசு வாழ்க்கையை வழங்குவதற்காகவும், யுவதி தனது வீட்டில் இருந்து சுமார் 19 பவுண் நகைகளைத் திருடி, காதலனிடம் வழங்கியுள்ளார்.

வீட்டில் நகைகள் காணாமல் போனது தொடர்பாக, யுவதியின் பெற்றோர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, யுவதி மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரித்தனர்.

அப்போது, யுவதி தான் நகைகளைத் திருடி காதலனுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டார்.

யுவதியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பொலிஸார் காதலனை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, நகைகளைத் திருடிய யுவதி, அவரது காதலன், நகைகளைத் திருடுவதற்கு உடந்தையாக இருந்த யுவதியின் நண்பி, நகைகளை விற்க உதவியவர்கள், மற்றும் நகைகளை வாங்கியவர்கள் என மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஏழு நபர்களும் தற்போது சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 தமிழக மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 தமிழக மீனவர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு