Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாகன விபத்துக்களில் குழந்தை உட்பட 3 பேர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாகன விபத்துக்களில் குழந்தை உட்பட 3 பேர் பலி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் ஒன்றரை வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று (29) மாத்தளை, மதவாச்சி மற்றும் கட்டான பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.

மாத்தளை பொலிஸ் பிரிவின் மாத்தளை – ரத்தோட்ட வீதியில் உள்ள மானந்தண்டாவெல பகுதியில், முச்சக்கர வண்டியொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சாரதியின் தாயாரும் சிறு குழந்தையும் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்தது.

மாத்தளை பகுதியில் வசித்த ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இதற்கிடையில், மதவாச்சி பொலிஸ் பிரிவின் A09 வீதியில் உள்ள வெலிஓயா சந்தியில் லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றொரு லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து ரம்பேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 58 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு-மீரிகம வீதியில் லங்காமாதா வீதி திரும்பும் சந்தியில் கெப் வண்டி ஒன்று வலதுபுறம் திரும்ப முயன்றபோது, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கட்டான பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

November 3, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்!; தென்னே ஞானானந்த தேரர் வலியுறுத்தல்
செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்!; தென்னே ஞானானந்த தேரர் வலியுறுத்தல்

November 3, 2026
BBQ அடுப்பால் ஏற்பட்ட விபரீதம்; நுவரெலியாவில் தம்பதியினர் உயிரிழப்பு!
செய்திகள்

BBQ அடுப்பால் ஏற்பட்ட விபரீதம்; நுவரெலியாவில் தம்பதியினர் உயிரிழப்பு!

November 3, 2026
களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து!

November 3, 2026
மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் அந்த பதவிக்கு தகுதியற்றவர்; சிறிநேசன்!
செய்திகள்

மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் அந்த பதவிக்கு தகுதியற்றவர்; சிறிநேசன்!

November 3, 2026
2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கை மற்றும் தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!
செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கை மற்றும் தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!

November 3, 2026
Next Post
ரஷ்யாவில் ஏற்பட்ட நில அதிர்வு; ஜப்பானை சுனாமி பேரலை தாக்கியது

ரஷ்யாவில் ஏற்பட்ட நில அதிர்வு; ஜப்பானை சுனாமி பேரலை தாக்கியது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு