களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி அறையொன்றில் இன்று (03) முற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தீ விபத்தில் குறித்த அறையில் தங்கியிருந்த மாணவிகளுக்குச் சொந்தமான அனைத்து உடைமைகளும் தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அறைக்குள் மாணவிகள் எவரும் இல்லாததால் உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகத் தீயணைப்புப் படையினர் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.








