Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவின் பிராந்தியமாக இலங்கையை மாற்றம் செய்யும் திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறிப்வோம்; மட்டு மக்கள் போராட்ட இயக்கம் சத்தியாகிரகம்

இந்தியாவின் பிராந்தியமாக இலங்கையை மாற்றம் செய்யும் திருட்டு ஒப்பந்தங்களை கிழித்தெறிப்வோம்; மட்டு மக்கள் போராட்ட இயக்கம் சத்தியாகிரகம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றும் சதி முயற்சியின் ஓர் அங்கமாகவே இருக்கின்றன என மக்கள் போராட்ட இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன் குற்றம்சாட்டினார்.

“அனுரா-மோடி திருட்டு ஒப்பந்தத்தை கிழித்தெறிப்வோம்” மற்றும் “ஐ.எம்.எப் மரணப்பொறியை எதிர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டம் நேற்று (2) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிருபாகரன், “இந்தியாவுடன் ஜனாதிபதி செய்த ஒப்பந்தங்கள் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டபோதும் இதுவரை பதில் இல்லை. இந்திய ஊடகங்களில் 10 ஒப்பந்தங்கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் இந்தியாவின் நலனுக்கே உகந்தவையாகும்,” என்றார்.

ஐ.எம்.எப் உடனான ஒப்பந்தம் நாட்டை வெளிநாட்டு பொருட்களின் சந்தையாக மாற்றும் நோக்குடன் மேற்கொள்ளப்படுவதாகவும், உள்ளூர் உற்பத்தியை கைவிட்டு புற்றுநோய்க்கு காரணமாகக் கருதப்படும் வெளிநாட்டு வெள்ளைச் சீனியை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். உள்ளூரில் உற்பத்தியாகும் கறுப்பு சீனிக்கு அதிக வரி விதிப்பதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

முன்னர் மேற்கொள்ளப்பட்ட 4000 கோடி ரூபா முதலீட்டுச் செயல்திட்டம் மாணவர் போராட்டத்தின் மூலம் நிறுத்தப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கமும் முன்னாள் அரசுகளைப் போலவே பணத்திற்காக வேலைவாய்ப்பு உரிமைகள், கல்வி உரிமைகளை விலக்க முயலுகின்றதாகவும் விமர்சித்தார்.

முன்னாள் ஆட்சி தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், இன அடிப்படையில் சட்டத்தின் அமல்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக கூறினார். செம்மணி புதைகுழி மற்றும் பட்டலந்த பிரச்சனை போன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை குறித்து எச்சரிக்கை வெளியிட்டார்.

மலையக தொழிலாளர்களுக்கு வழிகாட்டப்பட்ட ரூ.2000 அடிப்படை சம்பள வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாகவும், 2500 ரூபா சம்பளம் வழங்க இயலுமென்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ், சிங்களம், முஸ்லீம், பறங்கியர் என அனைத்து இனங்களும் இணைந்து இனவாத அரசைக் கடந்து மக்கள் உரிமைக்காக ஒருங்கிணைந்த போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது

8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு