Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சித்துப்பாத்தியில் மேலும் பல இடங்களில் மனித எச்சங்கள்; ஸ்கேன் ஆய்வில் கண்டுபிடிப்பு

சித்துப்பாத்தியில் மேலும் பல இடங்களில் மனித எச்சங்கள்; ஸ்கேன் ஆய்வில் கண்டுபிடிப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கேன் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த இடங்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜீ.பி.ஆர் ரக அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு முன்னதாக பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டது.

எனினும் அதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.

இதனையடுத்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்த ஸ்கேன் இயந்திரத்தை பெற்று ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டன.

இதன்போதே, பல இடங்களிலும் மனித எச்சங்கள் காணப்படுவதை ஸ்கேன் இயந்திரம் அடையாளப்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வீ.எஸ் நிரஞ்சன் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது

அதற்கமைய, நாளை பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை சித்துப்பாத்தி வளாகத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

இதன்போது, தமது உறவுகளை தொலைத்தவர்கள் எவ்வித அச்சமுமின்றி சித்துப்பாத்தி வளாகத்துக்கு சென்று, அடையாளங்களை உறுதிப்படுத்த முடியும் என்று சட்டத்தரணி வீ.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழாம், இன்று சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்திற்கு சென்று, நிலைமைகளை ஆராய்ந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் அடங்களாக குறித்த குழாம் இந்த கள விஜயத்தில் பங்கேற்றது.

இந்த நிலையில், சித்திப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் யதார்த்தப் பூர்வமாக அறிக்கையிடல்களை முன்னெடுக்க வேண்டும் என கள விஜயத்தில் ஈடுபட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் தங்கமுத்து தனராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு
செய்திகள்

வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

October 1, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!

October 1, 2026
13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!
செய்திகள்

13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!

October 1, 2026
சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!
செய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!

October 1, 2026
திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு
செய்திகள்

திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு

October 1, 2026
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்
செய்திகள்

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

October 1, 2026
Next Post
கொழும்பில் விடுதி சுற்றிவளைப்பு; பெண்கள் மற்றும் ஆண்கள் கைது

கொழும்பில் விடுதி சுற்றிவளைப்பு; பெண்கள் மற்றும் ஆண்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு