Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்மம்மா வீட்டுக்குச் சென்ற பின்னர் மனைவியைத் தாக்கிக் கொன்ற கணவர்!; வாகரையில் சம்பவம்

அம்மம்மா வீட்டுக்குச் சென்ற பின்னர் மனைவியைத் தாக்கிக் கொன்ற கணவர்!; வாகரையில் சம்பவம்

17 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்சேனை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக 24 வயதுடைய இளம் பெண்ணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (24) அதிகாலை பால்சேனை கிராம சேவகர் பிரிவிலுள்ள பெரிய சுவாமி ஆலய வீதியில் இடம்பெற்றுள்ளது. காளிராசா மனோஜினி என்ற 24 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அவரது 24 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தம்பதியினர் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் பல தடவைகள் குடும்பத் தகராறுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குடும்பத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இரவில் உயிரிழந்த பெண், அவரது கணவர் மற்றும் பெண்ணின் அம்மம்மா ஆகிய மூவரும் வீட்டில் உறங்கியுள்ளனர். அதிகாலை வேளையில் அம்மம்மா தனது வீட்டுக்குச் சென்ற பின்னர், வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை அவரது கணவர் தாக்கிக் கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த மாவட்ட குற்றத்தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து, வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிவான் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை மேலதிக சட்ட வைத்தியப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, தனது மனைவியைக் கொலை செய்துள்ளதாக கணவர் வாகரை பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து, அவர் குறித்த வீட்டிலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சடலம் மீதான சட்ட வைத்தியப் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர், உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!
செய்திகள்

இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

November 24, 2026
பொலிஸ் சீருடை மாற்றம் குறித்து அரசாங்கம் இன்னும் ஆலோசிக்கவில்லை!
செய்திகள்

பொலிஸ் சீருடை மாற்றம் குறித்து அரசாங்கம் இன்னும் ஆலோசிக்கவில்லை!

November 24, 2026
IFAD இடமிருந்து 30 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைப் பெற அமைச்சரவை பச்சைக்கொடி!
செய்திகள்

IFAD இடமிருந்து 30 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைப் பெற அமைச்சரவை பச்சைக்கொடி!

November 24, 2026
இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!
செய்திகள்

இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!

November 24, 2026
2 நாட்களுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்!
செய்திகள்

2 நாட்களுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்!

November 24, 2026
6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

November 24, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.