சமூக ஊடகங்களில் பரவி வரும் புதிய பொலிஸ் சீருடை வடிவமைப்புகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரலகன்வில பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், தற்போதைய பொலிஸ் சீருடையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
எனினும், சமூக ஊடகங்களில் வெளியாகும் வடிவமைப்புகள் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை எனவும், சீருடை மாற்றத்தை விட பொலிஸ் சேவையில் அடிப்படைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.







