Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!

11 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது.

சுமார் 4,000 பேர் வரை ஒரே நேரத்தில் பங்கேற்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்ட உள்ளக நிகழ்வு வளாகம், எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், முழுமையான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் மேலும் சில சிவில் கட்டுமானப் பணிகள் நிறைவுசெய்யப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடுகள், கண்காட்சிகள், வர்த்தகச் சந்திப்புகள் மற்றும் பாரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்காக இந்த வளாகம் பயன்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ‘சீ.எச்.ஈ.சி. போர்ட் சிட்டி கொழும்பு’ (CHEC Port City Colombo) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், காணி அபிவிருத்தி மற்றும் விற்பனைப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளருமான சலக்க விஜேரத்ன, துபாய் உள்ளிட்ட சர்வதேச நகரங்களில் காணப்படும் இத்தகைய வசதிகளை முன்மாதிரியாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரில் எதிர்காலத்தில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிரந்தர மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் உருவாக்கப்படும் வரை, இந்த ‘எயார் டோம்’ வளாகம் இடைக்கால வசதியாகப் பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, நிரந்தர மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் 4,000 பேர் பங்கேற்கக்கூடிய உள்ளகப் பல்நோக்கு மண்டபம் ஒன்றும், வெளிப்புறத்தில் 5,000 பேருக்கு வசதிகளை வழங்கக்கூடிய நிகழ்வு வளாகமும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாநாட்டு மையத்திற்கு அருகில் 400 முதல் 450 வரையிலான அறைகளைக் கொண்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் கொழும்பு துறைமுக நகரின் பிரதான அபிவிருத்தித் திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, ‘எயார் டோம்’ என்பது தூண்கள் அல்லது சுவர்கள் இன்றி, தொடர்ச்சியாகச் செலுத்தப்படும் காற்றழுத்தத்தின் மூலம் தாங்கி நிறுத்தப்படும் பிரம்மாண்டமான துணிக் கட்டமைப்பாகும். விரைவாகவும் ஒப்பீட்டளவில் குறைந்த செலவிலும் அமைக்கக்கூடிய இந்தக் கட்டமைப்புகள், மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
செய்திகள்

இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

November 24, 2026
அம்மம்மா வீட்டுக்குச் சென்ற பின்னர் மனைவியைத் தாக்கிக் கொன்ற கணவர்!; வாகரையில் சம்பவம்
செய்திகள்

அம்மம்மா வீட்டுக்குச் சென்ற பின்னர் மனைவியைத் தாக்கிக் கொன்ற கணவர்!; வாகரையில் சம்பவம்

November 24, 2026
இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!
செய்திகள்

இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

November 24, 2026
பொலிஸ் சீருடை மாற்றம் குறித்து அரசாங்கம் இன்னும் ஆலோசிக்கவில்லை!
செய்திகள்

பொலிஸ் சீருடை மாற்றம் குறித்து அரசாங்கம் இன்னும் ஆலோசிக்கவில்லை!

November 24, 2026
IFAD இடமிருந்து 30 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைப் பெற அமைச்சரவை பச்சைக்கொடி!
செய்திகள்

IFAD இடமிருந்து 30 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைப் பெற அமைச்சரவை பச்சைக்கொடி!

November 24, 2026
இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!
செய்திகள்

இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!

November 24, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.