Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

22 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிநாட்டு கடற்பரப்புகளில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2025ஆம் ஆண்டில் 111 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 40 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, வெளிநாடுகளால் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கையும் 2025ஆம் ஆண்டில் 19 ஆகக் காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை 7 ஆகக் குறைந்துள்ளது.

எனினும், 2024ஆம் ஆண்டில் 165 மீனவர்களும் 30 மீன்பிடிப் படகுகளும் வெளிநாடுகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழங்கிய எழுத்துமூலப் பதிலிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுதல் மற்றும் மாலைதீவு கடற்பரப்பிற்குள் உரிய அனுமதியின்றி நுழைதல் ஆகியவை இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்த இந்தியா மற்றும் மாலைதீவுடன் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்துதல், மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் மாலைதீவுடன் விசேட ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

மேலும், மீன்பிடிப் படகுகளில் GPS மற்றும் கப்பல் கண்காணிப்பு முறைமைகளைப் பொருத்துவதன் மூலம் வெளிநாட்டுக் கடற்பரப்புகளுக்குள் தவறுதலாக நுழைவதைத் தடுத்து, கைது நடவடிக்கைகளைக் குறைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: electionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் சீருடை மாற்றம் குறித்து அரசாங்கம் இன்னும் ஆலோசிக்கவில்லை!
செய்திகள்

பொலிஸ் சீருடை மாற்றம் குறித்து அரசாங்கம் இன்னும் ஆலோசிக்கவில்லை!

November 24, 2026
IFAD இடமிருந்து 30 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைப் பெற அமைச்சரவை பச்சைக்கொடி!
செய்திகள்

IFAD இடமிருந்து 30 மில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைப் பெற அமைச்சரவை பச்சைக்கொடி!

November 24, 2026
இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!
செய்திகள்

இலங்கையின் விசா இணையதளம் தற்காலிகமாக முடக்கம்!

November 24, 2026
2 நாட்களுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்!
செய்திகள்

2 நாட்களுக்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்!

November 24, 2026
6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

November 24, 2026
தித்வா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கோரி நுவரெலியாவில் 29ஆம் திகதி போராட்டம்!
செய்திகள்

தித்வா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் கோரி நுவரெலியாவில் 29ஆம் திகதி போராட்டம்!

November 24, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.