யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு ஆழியவளை களப்பு பகுதியில் நேற்று (04) மாலை நடைபெற்ற சோதனை நடவடிக்கையில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலின்படி, ஆழியவளை, கட்டைக்காடு பகுதி முழுவதிலும் நேற்று சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இச் சோதனை நடவடிக்கையின்போது ஆழியவளை களப்பு பகுதியில் 30 பொதிகள் அடங்கிய 102 கிலோ 350 கிராம் நிறையுடைய 23 மில்லியனுக்கும் அதிகம் மதிப்புடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
ஆனால், இச் சம்பவத்துடன் தொடர்புடைய யாரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








