யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் காணப்படும் மனித புதைகுழியில் இருந்து, மேலும் ஒரு சிசுவின் எலும்புக்கூட்டு தொகுப்பு நேற்று (06) புதன்கிழமை அகழ்ந்தெடுக்கப்பட்டது.
இந்த அகழ்வு யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசாவின் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியில் கடந்த 41 நாட்களாக கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ள அகழ்வு பணிகளில் இதுவரை சிறுவர்கள் மற்றும் சிசுக்களைச் சேர்ந்த 133 முழுமையான எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 147 எலும்பு கூட்டு தொகுதிகள் இத்தகவல் வரை கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









