Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொத்துவில் கல்வி வலய அமைப்பிற்கான பரிந்துரை கடிதங்களை பிரதமரிடம் கையளித்த உதுமாலெப்பை எம்.பி

பொத்துவில் கல்வி வலய அமைப்பிற்கான பரிந்துரை கடிதங்களை பிரதமரிடம் கையளித்த உதுமாலெப்பை எம்.பி

12 months ago
in செய்திகள்

பொத்துவில் கல்வி வலயத்தினை அமைப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநரினால் மத்திய கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதியை நேற்று முன்தினம் (06)அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பிரதமரிடம் கையளித்தார்.

பொத்துவில்,உகன பிரதேசங்களுக்கான புதிய கல்வி வலயங்களை அமைப்பதற்கான கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாய்மொழி கேள்வி ஒன்றை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் கேட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களுடைய அக்கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய,

பொத்துவில், உகன பிரதேசங்களுக்கான புதிய கல்வி வலயங்கள் அமைப்பதற்கான கோரிக்கை தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து இது வரை கல்வி அமைச்சுக்கு பரிந்துரை வழங்கப்படவில்லை எனவும் கிழக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரை கிடைக்கப்பெற்றதும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களால் தெரிவிக்கப்படுகிற பொத்துவில், உகன புதிய கல்வி வலயங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பதிலளித்தார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கௌரவ பிரதம மந்திரி அவர்கள் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில்,

பொத்துவில், உகன கல்வி வலயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம் பெற்ற போது கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரும், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உகன, பொத்துவில் பிரதேசங்களுக்கான புதிய கல்வி வலயங்களை நிறுவுவதற்காக கிழக்கு மாகாண ஆளுநரும் கல்வி அமைச்சின் செயலாளரும் ஏற்கனவே மத்திய கல்வி அமைச்சுக்கு பரிந்துரை வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

எனவே, கடந்த அரசாங்கம் புதிய கல்வி வலயங்களை வழங்குவதாக கூறி அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றியே வந்துள்ளனர். இதன் காரணமாகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் 143000 வாக்குகளை மக்கள் NPP கட்சிக்கு வழங்கி நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

எனவே அம்பாறை மாவட்ட மக்களின் நியாயமான இக்கோரிக்கையினை பிரதமர் ஹரினி அமரசூரிய நிறைவேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு மீண்டும் பதிலளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய,

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினதும், ஆளுநரின் சிபாரிசு கடிதமும் கிடைத்தவுடன் உகன, பொத்துவில் கல்வி வலயங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

(05-08-2025) பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற கல்விச் சீர்திருத்த சபை குழுக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பொத்துவில் பிரதேசத்திற்கான தனிக் கல்வி வலயத்தை உருவாக்க கிழக்கு மாகாண ஆளுநரினாலும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரினாலும் மத்திய கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்ட பரிந்துரை தொடர்பான கடிதங்களின் பிரதிகள் தன்னிடம் உள்ளதாக பிரதம மந்திரியிடம் தெரிவித்தா்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய,

நேற்று (06-08-2025) நடைபெற்ற கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் பொத்துவில் தனியான கல்வி வலயம் அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.
அதற்கமைவாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை நேற்று 06-08-2025 நடைபெற்ற கல்வி அமைச்சின் ஆலோசனை கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரால் மத்திய கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்ட சிபாரிசு கடிதத்தின் பிரதிகளை பிரதமரிடம்  கையளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை
செய்திகள்

06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை

August 3, 2026
ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

August 3, 2026
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

August 3, 2026
கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!
செய்திகள்

கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!

August 3, 2026
டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

August 3, 2026
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி
செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி

August 3, 2026
Next Post
ஜனாதிபதியையும் பெண்ணொருவரையும் தொடர்புபடுத்தும் பதிவுகள் தொடர்பில் சிஐடியில் முறைப்பாடு

ஜனாதிபதியையும் பெண்ணொருவரையும் தொடர்புபடுத்தும் பதிவுகள் தொடர்பில் சிஐடியில் முறைப்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.