Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சற்றுமுன் முள்ளியவளையில் பொலிஸார் அராஜகம்; சிறுமி மீது தாக்குதல்

சற்றுமுன் முள்ளியவளையில் பொலிஸார் அராஜகம்; சிறுமி மீது தாக்குதல்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முள்ளியவளை பொலிஸாரால் தாய் மற்றும் 10 வயதான மகள் ஆகியோர், அராஜகமாக வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தவபாலன் ஜெயரஞ்சினி என்ற குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் சுவிஸ்லாந்தில் குடியுரிமை பெற்று வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு சொந்தமான வீட்டில் குறித்த பெண் தற்காலிகமாக வசித்து வருகின்றார்.

குறித்த பெண் அரசாங்க உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் நிலையில், அவர் இதுவரை அரச விடுதியில் வசித்து வந்துள்ளார். தற்போது வேறு வீடு பார்த்துச் செல்லவுள்ள நிலையில் தற்காலிகமாக தனது தாயாரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குறித்த பெண்ணையும், அவரது மகளையும் 3 நாட்களாக வீட்டினுள் பூட்டி வைத்திருந்த முள்ளியவளை பொலிஸார், கடந்த புதன்கிழமை நள்ளிரவன்று வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அவரது நகை, பணம் உட்பட உடமைகள் அனைத்தையும் பறித்து வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு பின் பெண்ணையும், அவரது மகளையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கச் சென்றபோது அப்பெண்ணின் 10 வயதான மகளை தாயிடமிருந்து பிரித்து சப்பாத்துக் கால்களால் உதைத்து அடித்துள்ளனர்.

இதற்கு முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு பொறுப்பான பொஸிஸ் அதிகாரி மற்றும் பொலிஸார் துணை நிற்பதாகவும், தான் முறைப்பாடு வழங்கச் சென்ற போது, முன்கூட்டியே விடயத்தை தெரிந்து வைத்திருந்த பொஸிஸ் அதிகாரி, தன் முறைப்பாடை கவனத்தில் எடுக்கவில்லை எனவும், குறித்த சம்பவத்துக்கு சுவிஸ்லாந்தில் வசிக்கும் தனது தாய் மற்றும் சகோதரிகளே காரணம் என பொஸிஸ் அதிகாரி தன்னிடமே தெரிவித்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் தனது குழந்தை சப்பாத்துக் காலால் உதைத்து அடித்தபோது தான் உடனடியாக சிறுவர் உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தொலைபேசி மூலம் அறிவித்த நிலையில் அவர்கள் முறைப்பாடு வழங்க நேரடியாக கொழும்பு வருமாறு கூறியுள்ளனரே தவிர எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கணவனும் அரச அதிகாரியாக கடமையாற்றி வரும் நிலையில், அவர் வேலை நிமித்தம் வெளிமாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் தமக்கு ஏற்பட்ட அராஜகத்துக்கு நீதி வேண்டி தனது மகளுடன் குறித்த பெண் வீதியில் இருந்து போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.

இவ் விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றுக்கும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசித்து வரும் தனது தாய் மற்றும் சகோதரிகளின் உந்துதல் காரணமாகவே பொலிஸ் அதிகாரி உட்பட அனைவரும் தனக்கு அராஜகம் பண்ணுவதும், எதற்காக பொலிஸார் அவர்களுக்கு உடந்தையாக உள்ளனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.