Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் வெவ்வேறு வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழப்பு

நாட்டில் வெவ்வேறு வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்துகள் நேற்று (09) நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நேற்று அதிகாலை, மதவாச்சி பொலிஸ் பிரிவில் கெபிதிகொல்லேவ – மதவாச்சி வீதியில் இரண்டாவது கிலோ மீட்டர் மைல்கல் அருகில் மதவாச்சி திசை நோக்கிச் சென்ற வாகனம், வீதியோரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் மதவாச்சியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், படபொல பொலிஸ் பிரிவில் உடுவில, எத்கந்துர வீதியில் தொரல சந்திக்கு அருகில், எத்கந்துர திசையிலிருந்து தொரல திசை நோக்கிச் சென்ற துவிச்சக்கர வண்டியொன்று வீதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த வாகனத்துடன் மோதியுள்ளது.

விபத்தில் துவிச்சக்கர வண்டி செலுத்துனர் பலத்த காயமடைந்து உடுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இறந்தவர் படபொல பகுதியைச் சேர்ந்த 61 வயதானவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன் வரகாபொல பொலிஸ் பிரிவில் கொழும்பு – கண்டி வீதியில் மாஹேனபாத சந்திக்கு அருகில் கொழும்பு திசை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம், வீதியை கடந்த பாதசாரி மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இறந்தவர் தொலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 83 வயதானவர் என தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்; ஐந்து இராணுவ அதிகாரிகள் கைது

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்; ஐந்து இராணுவ அதிகாரிகள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு