Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் மொத்த பெரிய வெங்காயத் தேவையில் சுமார் 10 வீதம் மட்டுமே உள்நாட்டு உற்பத்தியின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 90 வீதம் இறக்குமதியை சார்ந்துள்ளதாகவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் சமந்த எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இலங்கையின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவை சுமார் 275,000 மெட்ரிக் தொன்னாக இருப்பதாகவும், 2025 ஆம் ஆண்டில் உள்நாட்டில் 31,389 மெட்ரிக் தொன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பெருமளவில் பெரிய வெங்காயம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், உள்ளூர் அறுவடை நடைபெறும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு விசேட பொருட்கள் வரி விதிக்கப்படுவதாகவும், தற்போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 50 ரூபாய் வரி அறவிடப்படுவதாகவும் அவர் கூறினார்.

குறைந்த விலையில் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதன் மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க முடியும் என்றாலும், அது உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதிக்கும் என்பதால் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த வரி தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

அதேவேளை, 2026 ஆம் ஆண்டில் உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தி 36,000 முதல் 40,000 மெட்ரிக் தொன் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வருடாந்த பெரிய வெங்காய இறக்குமதி:

  • 2020 – 265,000 மெட்ரிக் தொன்
  • 2021 – 200,000 மெட்ரிக் தொன்
  • 2023 – 294,000 மெட்ரிக் தொன்
  • 2024 – 200,000 மெட்ரிக் தொன்
  • 2025 – 200,000 மெட்ரிக் தொன்
  • 2026 (ஜூன் வரை) – 158,000 மெட்ரிக் தொன்

உள்நாட்டு உற்பத்தி:

  • 2019 – 18,603 மெட்ரிக் தொன்
  • 2020 – 4,318 மெட்ரிக் தொன்
  • 2021 – 65,907 மெட்ரிக் தொன்
  • 2022 – 17,799 மெட்ரிக் தொன்
  • 2023–2024 – 8,828 மெட்ரிக் தொன்
  • 2025 – 31,389 மெட்ரிக் தொன்
  • 2026 (எதிர்பார்க்கப்படும் அறுவடை) – 36,000 முதல் 40,000 மெட்ரிக் தொன்

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்

பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.