கென்யாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கென்யாவின் நியாஹெரா நகரில் இருந்து நியாகாச்சிற்கு சென்று கொண்டிருந்த பஸ் கமேகா நெடுஞ்சாலையில் சென்றபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததாலயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 10 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் படுகாயம் அடைந்த 20 பேர்மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கு அந்நாட்டின் ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.








