Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியா மீது போர் தொடுப்போம்; பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மிரட்டல்

இந்தியா மீது போர் தொடுப்போம்; பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மிரட்டல்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இரத்து செய்தது. இந்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா மாற்றங்களைச் செய்தால், இந்தியாவுக்கு எதிராக மீண்டும் ஒரு போர் தொடுக்கப்படும் எனப் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பிலாவல் பூட்டோ மிரட்டல் விடுத்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்து செய்தது. அத்துடன், ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களையும் தாக்கி அழித்தது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சிந்து மாகாணத்தில் நடைபெற்ற ஒரு கலாச்சார விழாவில் பேசிய பிலாவல் பூட்டோ, சிந்து நதி நீரைத் திசை திருப்புவது என்பது பாகிஸ்தானின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டார்.

“இந்தியப் பிரதமர் மோடி, சிந்து நதியின் மீது தாக்குதல் நடத்தினால், அது நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று அர்த்தம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற தாக்குதலை நடத்த நீங்கள் நினைத்தால், பாகிஸ்தானின் ஒவ்வொரு மாகாண மக்களும் உங்களுடன் சண்டையிடத் தயாராக உள்ளனர் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் எச்சரித்தார்.

மேலும், இந்தப் போரில் இந்தியா நிச்சயம் தோற்கும் என்றும், பாகிஸ்தான் ஒருபோதும் தலைவணங்காது என்றும் அவர் கூறினார். இதற்கு முன்னர், பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசீம் முனீர், சிந்து நதி மீது அணை கட்டினால் ஏவுகணைகள் மூலம் அழிப்போம் என இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
சாவகச்சேரியில் 284 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

சாவகச்சேரியில் 284 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு