Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முத்தையன்கட்டு இராணுவமுகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைஇடம்பெறும்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முத்தையன்கட்டு இராணுவமுகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைஇடம்பெறும்; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

11 months ago
in சினிமா, மட்டு செய்திகள்

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை இடம்பெற்றுவருகின்றது. தவறு செய்தால் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று புதன்கிழமை (13) பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்திகுழு தலைவர் அமைச்சர் சுனில் ஹந்தி நெத்தி தலைமையில் இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இல்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவமுகாமில் இளைஞர்கள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஊடகவியலாளர் மற்றும் பொதுமக்கள்அனைவருக்கும் தெரியும்.

இந்தநிலையில் அந்த முகாமிற்குள் உள் நுழைந்த சம்பவம் தொடர்பாக 3 இராணுவ வீரர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. அங்கு இரும்பு திருடப்பட்டதாக தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பில் இராணுவத்தினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரும்பு கடத்தலில் 3 இராணுவத்தினர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் நிமித்தம் 3 இராணுவத்தினரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. அதேவேளை நீதியாக விசாரணை இடம் பெற்றுவருகின்றது. இதனை மக்களுக்கு நாங்கள் சொல்லுகின்றோம். எனவே தவறு செய்தால் யாரென்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவது எமது பொறுப்பாகும்.

அதேவேளை இராணுவ முகாங்களையே பொலிஸ் நிலையங்களையே அவசியம் இல்லாமல் அகற்ற வேண்டியது இல்லை என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் பாதுகாப்பான அல்லது முக்கியமான இடங்களை தவிர நில விடுவிப்பினை தொடக்கத்தில் இருந்து கூடுதல் நிலங்களை விடுவித்துள்ளோம்.

நில பிரச்சனை தொடர்பாக இன்று விவாதித்தோம் எனவே எங்கள் முதல் நோக்கம் மக்களின் நிலம் பொலிஸ் நிலையங்கள் கையகப்படுத்தி இருந்தால் மாற்று இடத்தை கண்டுபிடிப்பதாகும். எனவே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குவது அல்ல மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் கொள்கை என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர் வெளியானது-LINK
காணொளிகள்

இரசிகர்கள் எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர் வெளியானது-LINK

July 20, 2026
மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!

July 20, 2026
வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்
செய்திகள்

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

July 20, 2026
பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்
காணொளிகள்

பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்

July 20, 2026
மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்றவர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்றவர் கைது

July 19, 2026
கழிவு அகற்றும் உழவு இயந்திரப் பெட்டியில் பாதயாத்திரைக்கான உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்ற மட்டக்களப்பு மாநகர சபை; ஈ.பி.டி.பி.யின் அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்!
காணொளிகள்

கழிவு அகற்றும் உழவு இயந்திரப் பெட்டியில் பாதயாத்திரைக்கான உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்ற மட்டக்களப்பு மாநகர சபை; ஈ.பி.டி.பி.யின் அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்!

July 17, 2026
Next Post
மட்டக்களப்பில் 700 சிறுவர்கள் உட்பட நாட்டில் 4 ஆயிரம் சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

மட்டக்களப்பில் 700 சிறுவர்கள் உட்பட நாட்டில் 4 ஆயிரம் சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு