சமுர்த்தி திட்டத்தை விட அஸ்வெசும மானியத் திட்டம் தற்போது திறனற்ற திட்டமாக செயற்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பொருளாதார நிபுணர்கள் குழுவுடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் அஸ்வெசுமவுக்கு தகுதியானவர்களில் 58 சதவீதமானோர் குறித்த சலுகைகளைப் பெறவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.








