இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலான பகுதிகள் வழமைப் போல இயங்க ஆரம்பித்துள்ளதுடன், சில பகுதிகளில் கதவடைப்பு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கதவடைப்பு தொடர்பில் அவர், தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.









