நேற்று (24) அதிகாலை, கல்முனை – மட்டு வீதியில் கல்லடி பகுதியில் ஆரையம்பதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் விபத்துக்குள்ளானது.
கொழும்பு விமான நிலையத்திலிருந்து திரும்பி வந்த குடும்பம், ஆரையம்பதி நோக்கி பயணித்தபோது, கல்லடி ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலயத்துக்கு முன்பாக கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமிருந்த ஆலயக் கிணற்றுடன் மோதியுள்ளது.

விபத்து நேரத்தில் காரில் ஆறு பேர் இருந்ததாகவும், அதில் 7 மாதக் குழந்தை ஒருவரும் அடங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் வீதியோர மக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு, உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 7 மாதக் குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.









