Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் பதவியேற்றார்

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் பதவியேற்றார்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தர அதிகாரியான திருமதி சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (2025.08.25) தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

திருமதி சசிதேவி ஜலதீபன் 2003ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்ததிலிருந்து பல்வேறு முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். 2003 முதல் 2006ஆம் ஆண்டு வரை திருகோணமலை மாவட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளராக பணியாற்றிய அவர், பின்னர் 2015ஆம் ஆண்டு வரை பிரதேச செயலாளராகவும், அதன் பின்னர் பொலன்னறுவை மாவட்ட திபுலாகல பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சில் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும், பின்னர் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சிலும் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரசுத் தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சிலும் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் பணியாற்றினார்.

2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், அதன் பின்னர் 2025 ஆகஸ்ட் மாதம் வரை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

நீண்டகால நிர்வாக அனுபவம், திறமையான வழிநடத்தல் மற்றும் சிறப்பான பணிசாதனைகளின் அடிப்படையில், திருமதி சசிதேவி ஜலதீபன் இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
சுமந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சுமந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு