இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த கைது நடவடிக்கை, குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் இந்தோனேசிய பொலிஸார் இணைந்து நடத்திய ஏழு நாள் நடவடிக்கையின் விளைவாகும். இதில் இந்திய புலனாய்வு அமைப்புகளும் உதவியளித்துள்ளன.
அமைச்சர் மேலும், அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இக்குற்றக் குழுக்கள் வளர்ந்ததாகவும், தற்போதைய அரசு அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுவரை 75 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.








