கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவின் ஒன்டாரியோ மாநிலம் ஸ்கார்பரோவில் வசித்து வந்த அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியரின் மகன் டானியல் அமலதாஸ் (19) கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

1993 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த இந்தத் தம்பதியரின் ஒரே மகன் டானியல், சம்பவம் நடந்த வேளையில் ஸ்கார்பரோ டவுன் சென்டர் ஷாப்பிங் மாலுக்கு அருகே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு திடீரென துப்பாக்கிச்சூடு நடந்ததில் டானியல் உயிரிழந்தார். பின்னர் விசாரணையின் அடிப்படையில் 17 வயதான இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
“எங்கள் பிள்ளைகள் கனடாவில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நம்பினோம். ஆனால், எங்கள் மகனை இழந்துவிட்டோம்” என தம்பதியர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.









