மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின் வருடாந்த திருவிழா நேற்று (29) மாலை கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமாகியது. இவ்விழா செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி கொடியிறக்கத்துடன் நிறைவு பெறவுள்ளது.







நேற்றைய முதலாம் நவநாள் திருப்பலியை பங்குத்தந்தையுடன் இணைந்து, அருட்தந்தையர்கள் அருட்பணி நிக்கலஸ் யூட் அடிகளார், அருட்பணி யூலியன் அடிகளார், அருட்பணி அம்புறோஸ் அடிகளார், அருட்பணி ஜெயகாந்தன் அடிகளார் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர். பக்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டு சதாசகாய அன்னையின் அருளைப் பெற்றனர்.








