Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவம்

உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களை கௌரவிக்கும் வடமத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் இன்று (31) காலை அனுராதபுரம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் 1-10 வரை இடங்களைப் பெற்ற 241 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியம் ரூ. 24.1 மில்லியன் செலவிட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே வரவேற்புரையாற்றியதோடு இத்திட்டத்திற்கான நோக்கத்தை தெளிவுபடுத்தினார்.

பிரதான உரையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிகழ்த்தியதோடு, ஜனாதிபதி நிதியம் அதன் உண்மையான வகிபாகத்தை உணர்ந்து மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்கி வருவதாகவும், அது குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோரும் விழாவில் உரையாற்றினர். பாராளுமன்ற உறுப்பினர்களான சேன நாணயக்கார, பாக்ய ஸ்ரீ ஹேரத், திலின சமரக்கோன் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் துறைசார் அதிகாரிகளுக்கான விசேட ஒரு நாள் பயிற்சிநெறி நேற்று (30) அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் ஜனாதிபதி நிதிய விடயங்களைக் கையாளும் துறைசார் அதிகாரிகளுக்கு இந்த நிகழ்வில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித் திட்டம் வடமத்திய மாகாணத்தில் ஜனாதிபதி நிதியத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும், பயனாளிகளுக்கு உயர்தர சேவைகளை வழங்கும், நவீனமயமாக்கப்பட்ட ஒன்லைன் முறைகளை அறிமுகப்படுத்தும் மற்றும் விரைவான சேவைகளை வழங்குவதற்கு தேவையான தெளிவு மற்றும் பயிற்சியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே, அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்
அரசியல்

மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை தீவிரம்

September 8, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

September 8, 2026
முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!
செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்; பெண் கைது!

September 8, 2026
ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!
செய்திகள்

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!

September 8, 2026
ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
Next Post
எரிபொருள் விலைகளில் மாற்றம்; வௌியான அறிவிப்பு

எரிபொருள் விலைகளில் மாற்றம்; வௌியான அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.