இந்த நாட்டில் பட்டலந்தை தொடக்கம் சிறுபான்மையினரது பிரச்சனை வரைக்கும் முன்னுக்கு நின்று செய்தவர் ரணில் அவருக்கு எல்லாம் தெரியும் ஆனால் பாம்பை அடிக்க பொருத்தமான கம்பால் அடித்திருந்தால் ஒருவரும் வீதிக்கு வந்திருக்க மாட்டார்கள். பொருத்தமில்லாத கம்பால் அடித்ததால் தான் நோய் என வெளி வந்துள்ளார். எனவே இந்த நாடு வசதி படைத்தவனுக்கும் ஆட்சி அதிகாரம் உள்ளவனுக்கும் ஒரு நீதியும் சாதாரண குடிமக்களுக்கு ஒரு நீதியும் உள்ள ஒரு நாடாக மாறிவிட்டது என சம உரிமை இயக்கத்தின் மட்டு மாவட்ட செயற்பாட்டாளர் தர்மலிங்கம் கிருபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக சம உரிமை இயக்கம் நடாத்தப்படும் ஊடக மகாநாடு. இந்த நாட்டில் ஆட்சி செய்த அரசுகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக பல கேள்விகளும் பலவிதமான அழுத்தங்கள் மக்களால் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அரசியல் கட்சிகளும் தங்கள் தங்கள் அரசியலுக்கு ஏற்ப இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனையை வேறு பக்கத்துக்கு திசைதிருப்பி இழுத்தடித்தது தான் உண்மை.
ஆனால் உண்மையாக இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக இன்று வரைக்கும் அதாவது முதலாளித்துவம் என்று ஆட்சி அமைத்தவர்களாக இருந்தாலும் சரி, இடதுசாரி என காட்டிக் கொண்டு வெளிவந்தவர்களாக இருந்தாலும் சரி எவரும் சரியான ஒரு முடிவுக்கு இன்றுவரை வரவில்லை.
இலங்கைக்குள் இந்த பொறிமுறையை கொண்டு தீர்க்க முடியாது என ஒரு பக்கமும் இல்லை. இலங்கைக்குள் பொறிமுறைக்குள் தீர்ப்பம் என வந்தவர்களும் இல்லை. சர்வதேச ஆலோசனையை பெற்று கொண்டு செய்வோம் என்ற அரசாங்கம் கூட இன்று வரைக்கும் இந்த பிரச்சனைக்கு முடிவு இல்லை.
இன்று சிறையில் அரசியல் கைதிகளாக இருந்தாலும் சரி வெளியில் காணாமல்போய் இருந்தாலும் சரி அதற்கான தீர்வு என்ன? சம உரிமை இயக்கம் 2010 தொடக்கம் இதனை வலியுறுத்தி நாடுபூராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது எனவே இந்த போராட்டத்தை மக்கள் கையில் எடுத்து கொண்டுவந்தால் மாத்திரம் தான் இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைவரும்.

அரசாங்கத்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்மந்தமான விளக்கங்களை பொறுப்பேற்கும் அரசுதான் தீர்வு வழங்க வேண்டும். அந்த வகையில் இன்று பொறுப்பேற்றுள்ள அரசு இந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டிய தார்மீக கடமையும் கடைப்பாடும் அவர்களுக்கு உள்ளது.
மனித உரிமைக்கு எதிரான செயலை கண்டித்து வீதியில் இறங்கி போராடுவது மனித உரிமை, அதற்கு ஆதரவு வழங்கும் உலக நாடுகளை உருவாக்கி கொண்டு இலங்கையில் இருக்கும் ஏனைய அமைப்புக்களையும் உள்வாங்கி இணைத்துக் கொண்டு போராட்டத்தை கொண்டுபொக வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.
அரச சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அல்லது அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி வன்முறையை தூண்டியது என்பதற்காக இந்த பயங்கரவாத சட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால் இன்று வரைக்கும் அந்த சட்டத்தின் மூலம் தண்டனை பெற்று சிறையில் இருந்தவர்கள் தற்போது ஆட்சி செய்தும் கூட சட்டம் பிழை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்ன காரணம்?
பிழை என தெரிவித்து வெளியில் வருகின்றவர்கள் அதை இலகுவாக தீர்ப்பதற்கான ஒரு வழி இருக்கும் என எல்லோரும் எதிர் பார்த்தது. ஆனால் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் ஆனால் அரசியல் கைதிகள் இல்லை என்கின்றனர். அதேவேளை காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சனை தொடர்பாக எந்தவித முன் ஏற்பாடுகளுக்கு தயாராக இல்லை.
முன்னாள் ஜனாதிபதி ரணிலை கைது செய்ததும் எல்லா கட்சிகளும் ஒன்று சோர்ந்து ஜனநாயக போராட்டம் செய்கின்றனர். ஆனால் இந்த நாட்டில் பட்டலந்தை பிரச்சனை தொடக்கம் சிறுபான்மையினரது பிரச்சனைவரைக்கும் முன்னுக்கு நின்று செய்தவர் ரணில். அவருக்கு எல்லாம் தெரியும். நிரூபிப்பதை விட்டுவிட்டு அவருக்கு 25 நோய் இருக்கு என வெளியில் வரமுடியுது.

எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை தொடர்பானவர்கள் தெரியாமல் செய்துவிட்டார்கள், நோய்காரர்கள் என அவர்களை வெளியில் விடலாம் தானே. 30 வருடமாக சிறையில் வைத்திருக்கின்றீர்கள் நீங்கள் இரண்டுநாள் இருக்கமுடிவில்லை.
ஆகவே வசதி படைத்தவனுக்கும் ஆட்சி அதிகாரம் உள்ளவனுக்கும் ஒரு நீதியும், சாதாரண குடிமக்களுக்கு ஒரு நீதியும் உள்ள ஒரு நாடாக இந்த நாடு மாறிவிட்டது. இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என ஆட்சி அமைத்தவர்கள் இதற்கு பதில் சொல்ல தயாரில்லை. எனவே இவைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அதற்கு மக்களாகிய நாங்கள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கும் அமைப்பை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
1948 இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 5 வருடத்துக்கு பின்னர் தொடங்கப்பட்ட பிரச்சனை தமிழ், முஸ்லீம், சிங்களவர்கள் என இனங்களுக்கு இடையே எதிராக மாறி மாறி எல்லா பக்கமும் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் பொறுப்பு கூறவேண்டிய அரசாங்கத்ததால் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பிரச்சனை முடியவில்லை.
இன்று செம்மணி, பட்டலந்தை, புதைகுழிகள் தொடர்பாக சாட்சியம் அளிக்க முன்வருகின்றனர் அதன் மூலம் இந்த நாட்டில் ஒரு அநீதி நடந்துள்ளது என வெளிக் கொண்டுவரவேண்டும் இரண்டாவது எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள் அவர்களுக்கு என்ன நீதி ?

159 பேருடன் ஆட்சிக்கு வந்தநீங்கள் ஏன் இதற்கு பின் நிற்கின்றீர்கள்? யாருக்கு பயப்பிடுகின்றீர்கள்? அடுத்துவரும் தேர்தலுக்கா? அல்லது கொடுக்கின்ற தீர்வு பிழை என்றா? சுமந்திரன், பீராம்பரம், மனோகணேசன், சஜித் ஒருபக்கம் என வேறு வேறு கோணமாக இருந்தவர்கள் இன்று சாதாரண ஒருவரின் கைது ஒன்று சேர்ந்து வீதிக்கு வந்துள்ளனர். அதைவிட தமிழ் மக்களை கொடுமைப்படுத்திய ரணிலுக்காக எமது சுமந்திரனும் கதைக்கின்றனர்.
எனவே பொருத்தமான கம்பால் பாம்பை அடித்திருந்தால் ஒருவனும் வீதிக்கு வந்திருக்கமாட்டார்கள். முதலாளித்துவத்தை காப்பாற்ற எல்லோரும் ஒண்று திரளுகின்றனர். ஆனால் மக்கள் பிரச்சனையை கொண்டுவர ஒன்று சேருவதில்லை எனவே தமிழ் தேசியத்துக்குள் உண்மையான ஒரு அரசியல் தளம் உருவாக்கவேண்டும்.
எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் உத்தரவாதம் தரக்கூடிய அரசியல் யாப்பை எற்றுக்கொள்ளாத நாட்டில் இருக்கின்றோம். எனவே இலங்கையில் ஒட்டு மொத்தமாக காணாமல் போயுள்ளவர்கள் சம்மந்தமாக முழுமையான அழுத்தம் கொடுக்க கூடிய மக்கள் சக்தியாக மாற்றம் அடைந்தால் மாத்திரம் தீர்வு கிடைக்கும். எனவே அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க கூடிய ஒரு அமைப்பாக சம உரிமை இயக்கம் தொடர்ந்து செயற்படும் என்றார்.








