யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (01) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகையில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
நினைவுக்கல்லில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பெயர் பொறிக்கப்படவில்லை என்பதுடன் “பொதுமக்களது நிதியை பயன்படுத்தி ” “மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.” என குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்துக்கான பலகையில் எழுதப்பட்டுள்ளது.










இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் அரச மொழிகளாக உள்ளபோதும், தமிழுக்கு இதுவரையும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்றையதினம் அது மாற்றம் பெற்றுள்ளது.
இந்நிலையில் யாழில் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்த ஜனாதிபதிக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.








