Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கபிலித்தை கந்தன் கோயிலில் படைக்கப்பட்ட மூங்கில் அரிசி பொங்கல்

கபிலித்தை கந்தன் கோயிலில் படைக்கப்பட்ட மூங்கில் அரிசி பொங்கல்

1 year ago
in செய்திகள்

மொனராகலை மாவட்டத்தில் கபிலித்தை கும்புக்கன் ஆற்றின் தென்கரையில், யால சரணாலயத்தின் மத்தியில் அமைந்துள்ள திறந்தவெளி மரக்கோயிலான கபிலித்தை முருகன் ஆலய தரிசனத்திற்காக கடந்த 23ம் திகதி வரலாற்று ஆய்வாளர் கலாநிதி என்.கே.எஸ்.திருச்செல்வம் தலைமையிலான குழுவினர் புனித யாத்திரை பயணத்தினை மேற்கொண்டனர்.

இதன் முதற்கட்டமாக கபிலித்தை புனித பயணத்தின் ஆரம்பத்தில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. அதாவது உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா தம்பியும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தையும், பாடலாசிரியரும், இசையமைப்பாளரும், இயக்குனரும், பாடகரும், நடிகரும், சிறந்த பக்திமானுமான கங்கை அமரன் 23ஆம் திகதி காலை கொட்டியாகலையில் வீடியோ அழைப்பு முலம் புனித யாத்திரை மேற்கொள்ளவிருந்த அடியார்கள் 53 பேருடனும் பேசியதுடன் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து ஆசீர்வாதம் வழங்கினார்.

அதன் பின்னராக வரலாற்று ஆய்வாளர் கலாநிதி என்.கே.எஸ்.திருச்செல்வம் தலைமையிலான குழுவினர் ஆரம்பகட்ட பூசையினை மேற்கொண்டு ஆறு உழவு இயந்திரத்தின் மூலம் தங்களது புனித யாத்திரை பயணத்தினை மேற்கொண்டனர்.

இம்முறை கபிலித்தை கந்தப்பெருமானை தரிசிப்பதற்கு சென்ற சமயத்தில் ஆலயத்தினை சென்றடைந்ததன் பிற்பாடு கலந்து கொண்டவர்கள் தங்களது தோசம், பாவம், தீட்டுக்கள் நீங்க ஏழு பாத்திரத்தில் ஏழு பூக்கள் போடப்பட்டு, 49 தடவை தலைக்கு நீர்வாத்து, பின்னர் கங்கையில் நீராடினார்.

அதன்பிற்பாடு இரவு கபிலித்தை கந்தனுக்கான காவல் தெய்வமான கருப்பண்ணசாமிக்கு (சிங்களவர்கள் இதனை கடவராயன் என்று அழைப்பார்கள்) நெய்வேத்திய பூசைகள் நிகழ்த்தப்பட்டது.

பின்னர் அதிகாலை கங்கையின் கரையோரத்தில் ஆலயத்தில் கலந்து கொண்டவர்கள் கரங்களில் கபிலித்தை முருகனை, ஏந்தியவாறு தூக்கி வந்து அமர்த்தியவாறு யாக பூசை மற்றும் அபிஷேக பூசைகள் இடம் பெற்றது. இதன்போது பால் அபிஷேகம் கலந்து கொண்ட யாத்திரிகர்கள் தங்கள் கரங்கால் செய்யக் கூடிய ஒரு பாக்கியம் கிடைத்தது.

மூங்கில் மரத்தில் 40 ஆண்டுகளின் பின் உற்பத்தியாகும் அரிய உணவாக விளங்கிய மூங்கில் அரிசியில் பொங்கல் படைத்து பூஜை செய்வது சிறப்பம்சமாக விளங்கியது. மூங்கில் அரிசி பொங்கல் இல்லாமல் முருகனுக்கு விசேட பூஜைகள் இல்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

September 15, 2026
மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
செய்திகள்

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

September 15, 2026
யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்
காணொளிகள்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

September 15, 2026
மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
Next Post
டெல்டா பிரதேசத்தில் விஷவாயு கசிவால் 30 பேர் வைத்தியசாலையில்

டெல்டா பிரதேசத்தில் விஷவாயு கசிவால் 30 பேர் வைத்தியசாலையில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு