Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விவசாயம் என்பது எதிர்கால முதலீடு; பிரதமர் ஹரிணி

விவசாயம் என்பது எதிர்கால முதலீடு; பிரதமர் ஹரிணி

11 months ago
in செய்திகள்

டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2025 செப்டம்பர் 2 ஆம் திகதி கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் (Galle Face Hotel) நடைபெற்ற, ருஹுண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் ஏற்பாடு செய்த “சர்வதேச விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு 2025” (ISAE) கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“காலநிலை நடவடிக்கை மற்றும் நிலைத்தன்மைக்கான விவசாய தொழில்நுட்பங்களில் புதுமைகளைப் புகுத்துதல்” என்பதே ISAE 2025 இன் தலைப்பாகும். இக்கருத்தரங்கின் மூலமாக உலகளாவிய விவசாயத்துறை, நிலையான தன்மை மற்றும் வளர்ந்து வரும் பயன்படுத்தி கிடைக்கப்பெறுகின்ற வாய்ப்புகள் சந்திக்க நேர்கொண்ட சவால்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இலங்கையின் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த மாநாட்டோடு இணைந்ததாக நடைபெறும் இளம் பட்டதாரிகளின் மன்றமானது மிகவும் பாராட்டத்தக்கதாகும். நமது எதிர்காலம் புத்தாக்கமான, அறிவு மற்றும் சமூக உணர்வு கொண்ட இளம் தலைமுறையினரைச் சார்ந்துள்ளது. அவர்களின் கல்வி, திறமை மற்றும் தலைமைத்துவ வளர்ச்சியில் முதலீடு செய்தல் என்பது இலங்கையிலும் அதற்கு அப்பாலும் ஏற்படும் காலநிலை மாற்றங்களுக்கு தாக்குப் பிடிக்கக்கூடிய எதிர்காலத்திற்கான முதலீடாகும்.

விவசாயம் என்பது உணவு உற்பத்தி மட்டுமல்ல. அது நமது சமூகங்கள், நமது பொருளாதாரம் மற்றும் நமது உலகம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதாகும். ஆகையினால் புத்தாக்கத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, பாதிப்புக்கு உள்ளாக கூடிய மக்களுக்கு உதவி புரிதல் மற்றும் நிலையான தன்மையுடன் முன்னோக்கிச் செல்லும் அதே வேலை, கொள்கைகளை வகுத்து காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய சவால்களை வாய்ப்புகளாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எல்.எம்.அபேவிக்ரம, சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே, அக்ஸ்டார் பிஎல்சி பிரதித் தலைவர் இந்திக்க குணவர்தன, ருஹுண பல்கலைக்கழகத்தின் பிரதி வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.ஏ.ஜயந்த, விவசாய பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ஜி.வை. ஜயசிங்கே, கலாநிதி அவந்தி மஹானாம, கலாநிதி அனுஷ்க பண்டார மற்றும் ருஹுண பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
அதிவேக வீதியில் லொறி – பவுசர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு

அதிவேக வீதியில் லொறி – பவுசர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.