பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் இன்று (03) சான்றுரைப்படுத்தியுள்ளார்.
இச் சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை அடுத்து திருத்தங்களுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 17 இலக்க பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.








