Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவில் அன்றாட உணவுப் பொருட்களுக்கான ஜீ.எஸ்.டி வரி 18 வீதத்திலிருந்து 5 வீதமாக குறைப்பு

இந்தியாவில் அன்றாட உணவுப் பொருட்களுக்கான ஜீ.எஸ்.டி வரி 18 வீதத்திலிருந்து 5 வீதமாக குறைப்பு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 22, 2025 முதல் அமலாகும் ஜிஎஸ்டி வரி குறைப்பால் அனைத்து பொருட்களின் விலையும் குறையும் என்று அறிவித்தார். புதுடெல்லியில் பேசிய அவர், இந்த வரி மாற்றம் சாமானிய மக்களுக்கு பெரும் நன்மையை அளிக்கும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு, நுகர்வோருக்கு செலவை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஜிஎஸ்டி மாற்றங்களின்படி, ரூ.2,500-க்கு குறைவான காலணிகள், கைப்பைகள், சாக்லேட்டுகள், நம்கீன்கள் போன்ற பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றாட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி 18%-லிருந்து 5%-ஆக குறைந்துள்ளது. இந்த மாற்றங்கள், வரி அமைப்பை எளிமையாக்குவதற்காகவும், மக்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மோடி தனது உரையில், “இந்த வரி குறைப்பு மக்களின் அன்றாட செலவுகளை குறைத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலை குறைவது சாதாரண குடும்பங்களுக்கு பயனளிக்கும்,” என்று கூறினார். இந்த மாற்றங்கள் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் உறுதியளித்தார்.

இந்த ஜிஎஸ்டி குறைப்பு, தீபாவளி பண்டிகை காலத்தில் அமேசான் இந்தியாவின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனைகளுக்கு கூடுதல் ஈர்ப்பை சேர்க்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இந்த வரி குறைப்பு, நுகர்வோரின் வாங்கும் திறனை உயர்த்தி, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் ஜிஎஸ்டி-யை 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது வரும் 22-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஆடம்பர பொருட்கள், புகையிலை பொருட்களுக்கு 40 விழுக்காடு வரி விதிக்கப்பட உள்ளது. வரி சீர்திருத்தத்தால் 353 பொருட்களின் விலை குறைய உள்ளது.

விற்பனை மற்றும் சேவை வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு பரிசு காத்திருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டியை இனி 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்மூலம், பல்வேறு பொருட்களின் விலை குறைய உள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், சென்னா, பன்னீர், ரொட்டி, இந்திய பிரட்டுகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகக் கூறினார். இதேபோல, மாணவர்களுக்கான நோட்டு புத்தகம், பென்சில், அழிப்பான், மேப், தனிநபர் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, 33 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய், அரிய வகை நோய் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தேங்காய் எண்ணெய், சோப், ஷாம்பு, பற்பசை, மிதிவண்டி, மேசை, நாற்காலி, சர்க்கரை, காபி, வெண்ணெய், நெய், சாஸ், சாக்லெட், பிஸ்கெட், உலர் பழங்கள், மார்பிள், பார்வையை சரி செய்யும் கண்ணாடிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாதனங்கள், சமையல் பாத்திரங்கள், மருத்துவ கருவிகள் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி பல்வேறு விதமாக இருந்த நிலையில், அவை 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளன.

ஏசி, 32 அங்குல தொலைக்காட்சிகள், சிறிய வகை கார்கள், 350 சிசி-க்கு குறைவான திறன் கொண்ட இருசக்கர வாகனங்கள், சிமெண்ட், பேருந்து, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மூன்று சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை 28 விழுக்காடு வரியில் இருந்து 18 விழுக்காடு வரிக்கு மாற்றப்பட்டுள்ளன.

5, 18 விழுக்காடு ஜிஎஸ்டி அடுக்குகளுடன் சிறப்பு வரிவிதிப்பாக 40 சதவீத வரி விதிப்பு அறிமுகம் செய்யப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள், எஸ்.யு.வி. ரக கார்கள், சொகுசு கார்கள், தனிநபர்களுக்கான விமானங்கள் உள்ளிட்டவற்றுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். புகையிலை, பான் மசாலா, சிகரெட் ஆகியவற்றின் மீதும் 40 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 12 சதவீதத்திற்கு கீழ் வரி விதிக்கப்பட்டிருந்த 99 சதவீத பொருள்கள் 5 சதவீதத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதேபோல், 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்த 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி விதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 353 பொருட்களின் விலை குறைய உள்ளது. 38 பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் 93 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், ஆடம்பரப் பொருட்கள், புகையிலைப் பொருட்களுக்கு 40 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பதன் மூலம் 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய ஜிஎஸ்டி வரி முறையால் குடிமக்களின் வாழ்க்கை மேம்படும் என்றும் சிறு வணிகர்கள் வணிகம் செய்வது எளிதாகும் என்றும் பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.