பரீட்சைச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான இணையவழி விண்ணப்பச் சேவை எதிர்வரும் நவம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தகவல் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாகவே இந்தச் சேவை இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக திணைக்களம் இன்று (06) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதன்படி, சனிக்கிழமை (07) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (08) ஆகிய இரு தினங்களிலும் பரீட்சைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான இணையவழி விண்ணப்பங்களை உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகச் சமர்ப்பிக்க முடியாது.
எனவே, பொதுமக்கள் இந்தத் தற்காலிக சேவைத் தடையை கவனத்தில் கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இணையத்தளம்: https://certificate.doenets.lk/certificate









